Wed. Apr 15th, 2026

புரட்சியாளர் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களின் 135வது பிறந்தநாளை முன்னிட்டு, செஞ்சியில் அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, பொதுமக்களுக்கான அன்னதானம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பட்டியலணி மாவட்ட தலைவர் பி. ஏழுமலை தலைமை வகித்தார்.

இந்த நிகழ்ச்சியை பட்டியலணி மாவட்ட பொதுச்செயலாளர் ப. தண்டபாணி ஏற்பாடு செய்திருந்தார். அன்னதானத்தை செஞ்சி காளி ராஜாராம் (அகில பாரத இந்து மக்கள் அமைப்பு) வழங்கினார்.

நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக வழக்கறிஞர் என்.ஏ. ஏழுமலை கலந்து கொண்டார். முன்னாள் மாவட்ட தலைவர் எம்.எஸ். ராஜேந்திரன், பாமக நகர செயலாளர் சின்னத்தம்பி, பொருளாதார பிரிவு மாவட்ட தலைவர் தங்கராமு, பட்டியலணி மண்டல தலைவர்கள் நாகராஜ், ராமதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மேலும் ஒன்றிய பொதுச்செயலாளர் ஏ. செல்வம், மாவட்ட துணை தலைவர் விஜயலட்சுமி, மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஞானமணி, ரமேஷ், மாவட்ட ஊடகப் பிரிவு முத்துலட்சுமி, செஞ்சி கிழக்கு ஒன்றிய பொதுச்செயலாளர் ஏ. சிவாஜி, சிவப்பிரகாசம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

பாமக நிர்வாகிகள் வழக்கறிஞர் திருமலை அய்யனார், சேகர், பூங்காவனம், செல்வகுமார், கரையாண்டி மற்றும் என்.டி.ஏ கூட்டணி நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு அம்பேத்கர் அவர்களின் புகழை பாடி நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

தமிழ்நாடு டுடே
மாவட்ட செய்தியாளர்: விசக்திவேல்

By TN NEWS