Wed. Apr 15th, 2026

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில், டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களின் 136வது பிறந்தநாள் விழா இன்று (14.04.2026) பக்தி மற்றும் மரியாதையுடன் கொண்டாடப்பட்டது.

ஆர்.எஸ். சாலையில் அமைந்துள்ள அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக (அதிமுக) சார்பில் கே.வி.குப்பம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் புரட்சி பாரதம் மாநில தலைவருமான பூவை ஜெகன் மூர்த்தி மற்றும் குடியாத்தம் தொகுதி வெற்றி வேட்பாளர் ஜி பரிதா புருஷோத்தமன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்த நிகழ்வில் பல்வேறு கட்சி நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர். குடியாத்தம் நகர கழக செயலாளர் ஜே.கே.என் பழனி, பேரணாம்பட்டு ஒன்றிய செயலாளர் டி. பிரபாகரன், தேர்தல் பொறுப்பாளர் சதீஷ் சங்கர், மாவட்ட துணை செயலாளர் கஸ்பா ஆர். மூர்த்தி, நகர மன்ற துணைத் தலைவர் பூங்கொடி மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மேலும், பாட்டாளி மக்கள் கட்சி, பாரதிய ஜனதா கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், புதிய நீதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் மாவட்ட மற்றும் நகர மட்ட நிர்வாகிகளும், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி உறுப்பினர்களும், தொண்டர்களும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சி, சமூக நீதிக்காக போராடிய அண்ணல் அம்பேத்கர் அவர்களின் சிந்தனைகளை நினைவுகூரும் வகையில் நடைபெற்றது.

தமிழ்நாடு டுடே
குடியாத்தம் தாலுகா செய்தியாளர்: கே.வி. ராஜேந்திரன்**

By TN NEWS