கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ தாணுமாலை சாமி கோவில்-இல், சித்திரை மாதம் 1ஆம் தேதியான இன்று (14.04.2026) தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு விழா பக்தி மரியாதையுடன் நடைபெற்றது.
தமிழ் புத்தாண்டை ஒட்டி நடைபெற்ற இந்த நிகழ்வில், “கணியும் கை நீட்டம்” எனப்படும் பாரம்பரிய வழக்கம் சிறப்பாக கடைபிடிக்கப்பட்டது. அதிகாலை முதலே கோவிலில் சுவாமிக்கு விசேஷ அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து, பக்தர்களுக்கு கணியும் கை நீட்டமும் வழங்கப்பட்டது. இதில் பழங்கள், வெற்றிலை, பாக்கு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு, ஆண்டின் முதல் நாளை நல்ல தொடக்கமாகக் கொண்டாடினர்.
இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து, தமிழ் புத்தாண்டு ஆசீர்வாதத்தை பெற்றனர்.
தமிழ்நாடு டுடே
கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்: ஷாலு V.J.