கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்நகர் பகுதியில் உள்ள ராதாகிருஷ்ணன் கோவிலில், சித்திரை மாதத்தின் முதல் நாளான இன்று (14.04.2026) தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ‘கணி காணும்’ நிகழ்ச்சி பக்தி உணர்வுடன் சிறப்பாக நடைபெற்றது.
தமிழ் புத்தாண்டை ஒட்டி அதிகாலை முதலே கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, பக்தர்கள் கணி காணும் வழிபாட்டில் ஆர்வமுடன் கலந்து கொண்டு தங்கள் புத்தாண்டை ஆன்மிக உணர்வுடன் தொடங்கினர்.
இதனைத் தொடர்ந்து கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு மரபுப்படி ‘கை நீட்டம்’ வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி, பக்தர்களுக்கு ஆனந்தமும் ஆன்மிக நிறைவும் அளிக்கும் வகையில் அமைந்து, தமிழ் புத்தாண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்கும் சூழலை ஏற்படுத்தியது.
தமிழ்நாடு டுடே
கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்: ஷாலு V.J.