Tue. Apr 14th, 2026

நாட்டிலேயே அதிகமான அளவில் 1309 (Law and Order)   காவல்நிலையங்கள் தமிழகத்தில் தான் உள்ளது..

அதுமட்டுமின்றி சிறப்பு பிரிவு காவல் நிலையங்கள் 1040 தனியாக உள்ளது…!

ஆக மொத்தம் 2349 Police Stations தமிழ்நாட்டில் இருக்கிறது.

இவை அனைத்துக்கும் பொறுப்பானவர் #tnpoliceoffl -ன் DGP-யான திரு @SandeepRRathore அவர்களே…!

#the_hindu நாளிதழில் Exclusive ஆக மாவட்ட SP-க்கள் சம்பந்தப்பட்ட உயரதிகாரியை கடந்து யார் உத்தரவிட்டாலும் எதையும் செய்யக்கூடாதென,DGP உத்தரவு பிறப்பித்துள்ளதாக வெளியாகியுள்ள செய்தியை தேர்தல் காலமாக இல்லாதிருந்தால் எளிதாக கடந்து சென்றுவிடலாம்.

ஆனால் இப்போது முடியாதே…!

யார் அப்படியான உத்தரவை பிறப்பிக்கிறார்கள் என்று மக்களுக்கு தெரிய வேண்டியது அவசியமாச்சே…!

ஏனென்றால்…!
#ECISVEEP தேர்தல் ஆணையத்தால்
DGP ஆக நியமிக்கப்பட்ட பின் 4-வது நாளிலேயே இப்படியொரு உத்தரவை பிறப்பித்துள்ளார் என செய்தி வெளியாகியிருக்கிறது.

அப்படியென்றால்,யாரோ சில அதிகாரிகள்,மாவட்ட
SP-க்களுக்கு யாருக்கோ ஆதரவாக செயல்பட நிர்பந்தம் கொடுத்துள்ளனர் என்று தானே அர்த்தமாகிறது.

உண்மையில்,இது உளவுத்துறை ரிப்போர்ட்டா..அல்லது
DGP-க்கு கிடைத்த ரகசிய தகவலா என்று @SandeepRRathore வெளிப்படுத்த வேண்டியது அவசியம்.

மத்திய உள்துறை அமைச்சகத்தால் காவல்துறையில் அனுமதிக்கப்பட்ட பதவியின் அளவு என்னவென்றால்..
DGP-11
ADGP-21
IG-43
DIG-32 என மொத்தம் 107 பேர் மட்டுமே மாவட்ட SP-க்களுக்கு
கட்டளையிடும் அளவிற்கு அதிகாரம் கொண்ட உயரதிகாரிகள்…!

இந்த 107 பேரில் (அதிகாரிகளில்) யார் எந்த கட்சிக்கு ஆதரவாக அல்லது எந்த வேட்பாளருக்கு ஆதரவாக செயல்பட்டனர்
என்று #tnpoliceoffl தெளிவுபடுத்த வேண்டும்.

ஷேக் முகைதீன்

By TN NEWS