Sun. Apr 12th, 2026

வேலூர் மாவட்டம், குடியாத்தம் (தனி) சட்டமன்றத் தொகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக (அதிமுக) வேட்பாளர் ஜி. பரிதா புருஷோத்தமன் இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இன்று காலை சுமார் 7 மணியளவில் உழவர் சந்தை பகுதியில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் நேரடியாக சந்தித்து ஆதரவு கோரி பிரச்சாரம் தொடங்கினார். தொடர்ந்து தரணம்பேட்டை, பிச்சனூர் பேட்டை, புது பேட்டை, அம்பாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மேளதாளத்துடன் சூறாவளி வாக்கு சேகரிப்பு நடைபெற்றது.

பிரச்சாரத்தின் போது சென்ற இடமெல்லாம் பெண்கள் ஆரத்தி எடுத்து வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். குறிப்பாக 11வது வார்டு தேரடி தெருவில், முன்னாள் நகர மன்ற துணைத் தலைவர் எஸ்.டி. மோகன்ராஜ், வேட்பாளருக்கு மலர் கிரீடம் அணிவித்து, வெள்ளி வேல் வழங்கி பாராட்டினார்.

இந்த நிகழ்வில் நகர கழக செயலாளர் ஜே.கே.என். பழனி, மாவட்ட கழக துணைச் செயலாளர் கஸ்பா ஆர். மூர்த்தி, நகர மன்ற துணைத் தலைவர் பூங்கொடி மூர்த்தி, முன்னாள் நகர மன்ற தலைவர் அமுதா சிவப்பிரகாசம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் நகர கழக துணைச் செயலாளர்கள் வி.இ. கருணா, ஏ. ரவிச்சந்திரன், எலக்ட்ரிக் கருணா, மெடிக்கல் சரவணன், கோல்ட் குமரன், வழக்கறிஞர் வினோத்குமார், வி.டி. சுரேஷ், ஆர். செல்வம், கே.வி. ராஜேந்திரன், ஜே. பாஸ்கர், கோனி ராமமூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகளும் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.

கூட்டணி கட்சிகளான த.மா.க சார்பில் கே.எம்.ஜி. ராஜேந்திரன், அருணோதயம் தீனன், பாஜக சார்பில் ஜெகன், சாய் ஆனந்த், ஸ்ரீகாந்த், ஸ்ரீதேவி, ஜோதி ரேகா, பாமக சார்பில் முன்னாள் நகர மன்ற உறுப்பினர்கள் உதயகுமார், விஜயகுமார் மற்றும் புதிய நீதி கட்சி மண்டல செயலாளர் சரவணன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

இந்த பிரச்சார நிகழ்வு குடியாத்தம் தொகுதியில் தேர்தல் சூழலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

செய்தியாளர்: கே.வி. ராஜேந்திரன்
குடியாத்தம் தாலுகா

By TN NEWS