தென்காசி மாவட்டம், கீழப்பாவூர் ஒன்றியத்துக்குட்பட்ட ஆவுடையானூர் ஊராட்சியில் அடிப்படை வசதிகள் குறைவாக உள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். பெரிய ஊராட்சியாகக் கருதப்படும் இந்தப் பகுதியில் சுமார் 16,000 மக்கள் தொகையும், 11,000 வாக்காளர்களும் உள்ள நிலையில், நிர்வாக சேவைகள் போதுமான முறையில் கிடைப்பதில்லை எனக் கூறப்படுகிறது.
பொதுமக்கள் தெரிவிப்பதாவது, ஊராட்சிக்குட்பட்ட பல குக்கிராமங்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் சரிவர சென்றடைவதில்லை. ஒரு பகுதியிலேயே நிதி அதிகம் செலவிடப்படுவதால், மற்ற பகுதிகள் புறக்கணிக்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும், அடிப்படை வசதிகளான சிமெண்டு சாலை, கழிவுநீர் கால்வாய், தெருவிளக்கு பராமரிப்பு போன்றவை திருப்திகரமாக இல்லை என கூறப்படுகிறது. குறிப்பாக, சில பகுதிகளில் இன்னும் சாலை வசதி இல்லாத நிலையும், கழிவுநீர் தேங்கி நிற்கும் பிரச்சினையும் தொடர்கிறது. மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் (OHT) முறையாக சுத்தம் செய்யப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது.
தெருவிளக்குகள் சரியாக பராமரிக்கப்படாததால் இரவு நேரங்களில் பொதுமக்கள் சிரமம் அனுபவிக்கின்றனர். அதேபோல், குடிநீர் விநியோகத்திலும் சீர்கேடு இருப்பதாகவும், பாதுகாக்கப்பட்ட குடிநீரில் கலப்பு நடக்கிறது என்ற சந்தேகமும் பொதுமக்களிடையே நிலவுகிறது.
ஊராட்சிக்கு குப்பை கொட்டும் இடம் கூட இல்லாத நிலைமை, மற்றும் பணச்செலவுகளில் வெளிப்படைத்தன்மை இல்லாமை குறித்தும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. சில பணிகளில் அதிக செலவாக கணக்கிடப்படுவதாகவும் மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
அத்துடன், வார்டு உறுப்பினர்கள் பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு உரிய முக்கியத்துவம் அளிப்பதில்லை என்றும், ஆக்கிரமிப்பு அகற்றுதல் நடவடிக்கைகளிலும் முரண்பாடுகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. அரசு வழங்கும் இலவச வீட்டு திட்டங்களிலும் முறைகேடுகள் உள்ளதாக சிலர் குற்றம்சாட்டுகின்றனர்.
இந்த நிலையில், ஆவுடையானூர் ஊராட்சியை நிர்வாக வசதிக்காக 2 அல்லது 3 தனி ஊராட்சிகளாகப் பிரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதன் மூலம் ஒவ்வொரு பகுதிக்கும் தேவையான அடிப்படை வசதிகள் விரைவாக கிடைக்கும் என அவர்கள் நம்புகின்றனர்.
இந்த குற்றச்சாட்டுகள் குறித்து சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்தின் விளக்கம் கிடைக்கவில்லை.
செய்தியாளர்: அமல்ராஜ்
தென்காசி மாவட்டம்