Sun. Apr 12th, 2026

விழுப்புரம் மாவட்டம் வானூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வாகன தணிக்கையின் போது தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் கடத்தல் சம்பவம் கண்டுபிடிக்கப்பட்டு, மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புளிச்சப்பள்ளம் ஓடைகரை அருகே வானூர் காவல் ஆய்வாளர் திருமதி தீபா தலைமையில், காவல் உதவி ஆய்வாளர்கள் திவாகர், லியோ சார்லஸ் மற்றும் காவலர்கள் இணைந்து வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்துக்கிடமான முறையில் வந்த TN 10 AX 1791, KA 07 N 1245, KL 65 S 6709 ஆகிய வாகனங்கள் நிறுத்தி சோதனை செய்யப்பட்டது.

சோதனையின் போது, தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் கடத்தப்பட்டு வந்தது கண்டறியப்பட்டது. இதனையடுத்து,

வினோத் (30), கிருஷ்ணகிரி மாவட்டம்

பார்த்தி (33), மயிலாப்பூர், சென்னை

ஜெயக்குமார் (47), லாஸ்பேட்டை, பாண்டிச்சேரி


ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து சுமார் ரூ.2.50 லட்சம் மதிப்புள்ள 247 கிலோ குட்கா பொருட்கள், மூன்று கார்கள் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக குற்றவாளிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

செய்தியாளர்: சக்திவேல் விஜயன்
விழுப்புரம் மாவட்ட கிரைம் செய்தி

By TN NEWS