Sun. Apr 12th, 2026

பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கோபாலபுரம் மற்றும் ஆலாபுரம் ஊராட்சி பகுதிகளில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் முனைவர் பெ. பழனியப்பன் இன்று தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.

இந்தப் பிரச்சாரத்தின் போது, கோபாலபுரம் மற்றும் ஆலாபுரம் எல்லைப் பகுதிகளில் வேட்பாளருக்கு மாவட்ட, ஒன்றிய மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கூடி உற்சாக வரவேற்பு அளித்தனர். வழிநெடுகிலும் மக்கள் திரண்டு வந்து ஆதரவை வெளிப்படுத்தியதுடன், பரப்புரை நிகழ்ச்சி உற்சாகமாக நடைபெற்றது.

பொதுமக்களிடம் உரையாற்றிய வேட்பாளர் பழனியப்பன், தமிழக முதல்வரின் பல்வேறு சாதனைகளை விரிவாக எடுத்துரைத்தார். குறிப்பாக கல்வித் துறைக்கு வழங்கப்பட்ட முன்னுரிமை மற்றும் “நான் முதல்வன்” திட்டத்தின் மூலம் பயிற்சி பெற்று குடிமைப் பணித் தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவர்களை எடுத்துக்காட்டாகக் குறிப்பிட்டார். மாணவர்கள் அரசின் நலத்திட்டங்களை முழுமையாக பயன்படுத்தி தங்களது எதிர்காலத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், விவசாய வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகியவற்றில் முழுமையான அர்ப்பணிப்புடன் செயல்படுவேன் என உறுதி அளித்தார்.

இந்த நிகழ்வில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் மாவட்ட, ஒன்றிய மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டு வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்தனர்.

செய்தி தொடர்பு அதிகாரி: வே. பசுபதி
தமிழ்நாடு டுடே மக்கள் செய்தி

By TN NEWS