Fri. Apr 10th, 2026

விழுப்புரம், ஏப். 9:
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் திமுக தேர்தல் அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.

செஞ்சி – திருவண்ணாமலை சாலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், முன்னாள் மத்திய அமைச்சர் Gingee Ramachandran தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளரும் செஞ்சி தொகுதி திமுக வேட்பாளருமான செஞ்சி மஸ்தான் எம்.எல்.ஏ முன்னிலை வகித்தார். அவர் மூன்றாவது முறையாக தேர்தலில் போட்டியிடுகிறார்.

தொடர்ந்து, வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு திரட்டும் பணிகள் தொகுதி முழுவதும் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் செந்தமிழ் செல்வன், ஒன்றிய மற்றும் மாவட்ட நிர்வாகிகள், பேரூராட்சி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மாவட்ட செய்தியாளர்: சக்திவேல் விஜயன், விழுப்புரம்

By TN NEWS