சிதம்பரம், ஏப். 9:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது.
இன்று காலை கூட்டணியின் வேட்பாளர் தமிமுன் அன்சாரி திறந்தவெளி சாலை பரப்புரையை தொடங்கினார். இந்த பரப்புரையை, தமிழக அமைச்சரான M. R. K. Panneerselvam குமராட்சி ஒன்றியம் ஜெயங்கொண்ட பட்டினம் பகுதியில் இருந்து துவக்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, திமுக மாவட்ட கழக பொருளாளர் எம்.ஆர்.கே.பி. கதிரவன் உள்ளிட்டோர் வேட்பாளருடன் இணைந்து தொகுதியின் பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
பரப்புரையின் போது, கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் கட்சி மற்றும் கூட்டணி நிர்வாகிகள் பொதுமக்களை சந்தித்து தேர்தல் குறித்து விளக்கமளித்தனர்.
மேலும், கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டதாகவும், அதனால் சில இடங்களில் பொதுமக்கள் வரவேற்பு அளித்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
செய்தியாளர்: சிவக்குமார், சிதம்பரம்

