விழுப்புரம், ஏப். 9:
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 முன்னிட்டு, 100 சதவீத வாக்குப்பதிவை உறுதிசெய்யும் நோக்கில் விழுப்புரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்ட பெருந்திட்ட வளாக மைதானத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவருமான Sheikh Abdul Rahman கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் அவர் தெரிவித்ததாவது: இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, பொதுமக்கள் மற்றும் முதல் தலைமுறை வாக்காளர்களிடையே வாக்களிப்பதன் அவசியம் குறித்து தொடர்ந்து எடுத்துரைக்கப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, மாற்றுத்திறனாளிகள் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர்களில் விழிப்புணர்வு ஒட்டுப்பலகைகளை ஒட்டி பேரணியில் கலந்து கொண்டனர். சுமார் 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்த பேரணி, பெருந்திட்ட வளாக மைதானத்திலிருந்து தொடங்கி, பிரதான சாலை வழியாக விழுப்புரம் நான்கு முனைச் சந்திப்பு வரை சென்றது.
மேலும், வாக்களிப்பதன் முக்கியத்துவம், ஜனநாயகக் கடமையின் அவசியம் மற்றும் தேர்தலில் பங்கேற்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அனைவரும் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க வேண்டும் என்றும், மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதிசெய்ய ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்வில் இணை இயக்குநர்/திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) செந்தில்வடிவு, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ராஜசேகர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பார்கவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர்: சக்திவேல் விஜயன், விழுப்புரம்