தர்மபுரி, ஏப்ரல் 8:
பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதி வேட்பாளரும், தர்மபுரி மேற்கு மாவட்டக் கழகச் செயலாளருமான முனைவர் பெ. பழனியப்பன் (M.Sc., Ph.D.) அவர்கள் இன்று தர்மபுரி கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட திப்பரெட்டிஅள்ளி, கொண்டகரஅள்ளி மற்றும் வே.முத்தம்பட்டி ஆகிய ஊராட்சிகளில் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.
இந்த பிரச்சாரத்தின் போது, அப்பகுதி விவசாயிகளைச் சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்த அவர், விவசாய விளைபொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கவும், பாசன வசதிகளை மேம்படுத்தவும் தொடர்ந்து பாடுபடுவேன் என உறுதியளித்தார்.
வே.முத்தம்பட்டி பகுதியில் இளைஞர்களை சந்தித்து உரையாற்றிய அவர், “திராவிட மாடல் அரசு இளைஞர்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பிற்காக பல்வேறு முன்னோடித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மாணவர்களின் உயர்கல்வி தேவைகளை பூர்த்தி செய்ய நான் உறுதுணையாக இருப்பேன்” என்று தெரிவித்தார்.
பிரச்சாரத்தின் போது பல இடங்களில் பொதுமக்கள், குறிப்பாக பெண்கள், அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்து தங்களின் ஆதரவை வெளிப்படுத்தினர். மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் M. K. Stalin தலைமையிலான நல்லாட்சி தொடர, உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு அவர் வலியுறுத்தினார்.
இந்த நிகழ்வில் கிழக்கு ஒன்றியக் கழக நிர்வாகிகள், ஊராட்சி மன்றத் தலைவர்கள், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் கழகத் தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.
வே. பசுபதி
தமிழ்நாடு டுடே மக்கள் செய்தி தொடர்பு அதிகாரி
