Thu. Apr 9th, 2026

தருமபுரி மாவட்டம், அரூர் சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அ. சண்முகத்திற்கு ஆதரவாக, திமுக துணைப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி அவர்கள் இன்று (08.04.2026) மாலை அரூர் பேருந்து நிலையம் அருகிலுள்ள அண்ணா மணிமண்டபம் எதிரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு வாக்கு சேகரித்தார்.

தருமபுரி கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ. மணி அவர்கள் தலைமையில், கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், வேட்பாளர் அ. சண்முகத்திற்கு “உதயசூரியன்” சின்னத்தில் வாக்களிக்குமாறு பொதுமக்களிடம் கனிமொழி கருணாநிதி அவர்கள் கோரிக்கை விடுத்தார்.

இந்த தேர்தல் பிரச்சார நிகழ்வில் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர மற்றும் பேரூர் கழக நிர்வாகிகள், பல்வேறு சார்பு அணிகளின் பொறுப்பாளர்கள், தேர்தல் பணிக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டதுடன், 3000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரளாக பங்கேற்று நிகழ்வை சிறப்பித்தனர்.

அரூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் பணிக்குழு
வே. பசுபதி
தமிழ்நாடு டுடே மக்கள் செய்தி தொடர்பு அதிகாரி

By TN NEWS