கன்னியாகுமரி மாவட்டத்தில் சட்டவிரோதமாக செயல்பட்ட கல்குவாரிகள் மீது மாவட்ட காவல் துறை கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மாவட்ட எஸ்பி டாக்டர் ஸ்டாலின் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
📍 தோட்டியோடு பகுதியில் நடத்தப்பட்ட திடீர் சோதனையில், விதிமுறைகளை மீறி செயல்பட்ட 2 கல்குவாரிகள் கண்டறியப்பட்டன. உடனடியாக அவற்றை மூட உத்தரவிடப்பட்டது.
👉 சட்டவிரோத குவாரிகள் செயல்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கை அதன் ஒரு பகுதியாகும்.
⚠️ மேலும், சட்டவிரோத செயல்பாடுகளை கவனிக்காமல் விட்ட துணை அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எஸ்பி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
🔍 “சட்டவிரோதமாக இயங்கும் கல்குவாரிகள் எதுவும் விட்டுவைக்கப்படாது. அவற்றை முற்றிலும் கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகள் தொடரும்” எனவும் தெரிவித்துள்ளார்.
👍 எஸ்பியின் இந்த திடீர் மற்றும் உறுதியான நடவடிக்கைக்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு டுடே | கன்னியாகுமரி மாவட்டம்
✍️ செய்தியாளர்: ஷாலு V. J.
