Sun. Mar 29th, 2026

விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற பாலியல் வன்புணர்ச்சி வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட எதிரிக்கு 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு, 06.03.2023 அன்று மேல்பாதி கிராமம் முருகன் கோவில் அருகே நடந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்திற்குப் பின்னர், 17.03.2023 அன்று 18 வயதுடைய பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தார்.

இந்த வழக்கில், மேல்பாதி கிராமத்தைச் சேர்ந்த வீரமணி (24), தந்தை ராஜேந்திரன் என்பவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, பெண்ணை பாலியல் வன்புணர்ச்சி செய்ததாக வழக்கில் தெரிவிக்கப்பட்டது.

வழக்கை விசாரித்த மகிளா நீதிமன்றம் விழுப்புரம் நீதிபதி திருமதி. வினோதா அவர்கள், குற்றம் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, எதிரி வீரமணிக்கு 11 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை மற்றும் ரூ.25,000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அரசு தரப்பில் இருந்து ரூ.1,00,000 இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கை திருமதி. முத்துலட்சுமி அவர்கள் திறம்பட விசாரித்தார். அரசு தரப்பில் வழக்கை திருமதி. சங்கீதா முன்னின்று நடத்தினார்.

இந்த தீர்ப்பு, பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை வலியுறுத்தும் வகையில் அமைந்துள்ளது.

செய்தி: சக்திவேல் விஜயன்
விழுப்புரம் மாவட்ட கிரைம் செய்தியாளர்

By TN NEWS