செஞ்சி, மார்ச் 27:
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026 ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் முன்னேற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தேர்தல் 2026: செஞ்சி சட்டமன்றத் தொகுதி.
70. செஞ்சி சட்டமன்றத் தொகுதிக்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 30ஆம் தேதி தொடங்க உள்ளதால், அந்த நாட்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகள் குறித்து விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்பிரனீத், ஐபிஎஸ்., நேற்று (மார்ச் 27) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வும், ஆலோசனைகளும்.
இந்த ஆய்வின் போது, வேட்புமனு தாக்கல் நடைபெறும் வளாகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள், பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் வருகை நிர்வாகம், வாகன நிறுத்த வசதி உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. மேலும், தேர்தல் நடைமுறைகள் சீராக நடைபெற தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
இந்த ஆய்வில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கார்த்திகேயன், செஞ்சி காவல் துணை கண்காணிப்பாளர் ரமேஷ் ராஜ், தேர்தல் வட்டாட்சியர் உமாமகேஸ்வரி, காவல் ஆய்வாளர்கள் அண்ணாத்துரை, பிரகாஷ், உதவி ஆய்வாளர் முனுசாமி மற்றும் காவலர் குமரவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
செய்திகள்:
விழுப்புரம் மாவட்ட முதன்மை செய்தியாளர்:
தமிழ். மதியழகன்.
