வேலூர் மாவட்டம் – காட்பாடி
சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் விழிப்புணர்வு பேரணி காட்பாடியில் நடைபெற்றது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, 23.04.2026 அன்று நடைபெற உள்ள தேர்தலை முன்னிட்டு, அனைத்து வாக்காளர்களும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்பதைக் குறிக்கோளாகக் கொண்டு இந்த பேரணி நடத்தப்பட்டது.
இந்த விழிப்புணர்வு பேரணியை சமூக பாதுகாப்புத் திட்ட தனி துணை ஆட்சியரும், காட்பாடி தேர்தல் நடத்தும் அலுவலருமான சி. மாறன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ஆர். பாலச்சந்தர் முன்னிலை வகித்தார்.
26.03.2026 அன்று காலை 10 மணி அளவில், டி.கே.எம். கல்யாண மண்டபம் அருகில் இருந்து பேரணி தொடங்கி, சில்க் மில் சந்திப்பு – காங்கயநல்லூர் சாலை வழியாக சென்று, மீண்டும் தொடக்க இடத்திலேயே நிறைவு பெற்றது.
இந்த பேரணியில் இந்தியன் ரெட் கிராஸ் சங்கம், ஆர்.ஐ.சி.டி கல்வி நிறுவனம் மற்றும் வேலூர் மாவட்ட தேர்தல் ஆணையம் இணைந்து செயல்பட்டன.
காட்பாடி ரெட் கிராஸ் சங்க அவைத்தலைவர் முனைவர் செ.நா. ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். ஆர்.ஐ.சி.டி கல்வி நிறுவன இயக்குனர் கே.எஸ். அசரப் வரவேற்று பேசினார்.
மேலும், துணை வட்டாசியர் முருகன், ரெட் கிராஸ் சங்க மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர். ஸ்ரீனிவாசன், காட்பாடி கிளை அவை துணைத் தலைவர் ஆர். விஜயகுமாரி, செயலாளர் எஸ்.எஸ். சிவவடிவு, பொருளாளர் வி. பழனி உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் மேலாண்மை குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
அதேபோல், சோமசுந்தரம் கல்வி நிறுவன ஆசிரியர்கள் மற்றும் ஆர்.ஐ.சி.டி பாராமெடிக்கல் கல்லூரி மாணவர்கள் உற்சாகமாக கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்த பேரணி மூலம் “ஒவ்வொரு வாக்கும் முக்கியம் – 100% வாக்களிப்போம்” என்ற செய்தி பொதுமக்களுக்கு வலியுறுத்தப்பட்டது.
K. V. ராஜேந்திரன்
குடியாத்தம்
