குடியாத்தம், மார்ச் 26:
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில், அகில பாரத மக்கள் சக்தி இயக்கத்தின் நகர மகளிரணி சார்பில் குத்துவிளக்கு பூஜை நிகழ்ச்சி மிக விமர்சையாக நடைபெற்றது.
குடியாத்தம் தங்கநகர் பகுதியில் அமைந்துள்ள மீனாட்சி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பெண்கள் திரளாக பங்கேற்று பக்தி உணர்வுடன் குத்துவிளக்கு ஏற்றி வழிபாடு செய்தனர்.
நிகழ்ச்சிக்கு இயக்கத்தின் நிறுவனத் தலைவர் ம.சி. கார்த்திக்ஜி அவர்கள் தலைமை தாங்கினார். மாநிலத் தலைவர் இராம. சரவணன் அவர்கள் சிறப்புரையாற்றி, சமூக ஒற்றுமை மற்றும் பெண்களின் பங்கு குறித்து பேசினார்.
மேலும், சிறப்பு அழைப்பாளர்களாக லோகநாத சுவாமிஜி மற்றும் ஆம்பூர் சதீஸ் சுவாமிஜி ஆகியோர் கலந்து கொண்டு ஆன்மீக உரையாற்றினர்.
நிகழ்ச்சியின் நிறைவாக நகர தலைவர் எஸ். சங்கர் அவர்கள் மற்றும் மாநில செயலாளர் ஜி. வீனோத் குமார் அவர்கள் நிகழ்வை ஒருங்கிணைத்து நன்றி தெரிவித்தனர்.
இந்த நிகழ்வில் இயக்க நிர்வாகிகள், மகளிரணி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
கே.வி. ராஜேந்திரன், குடியாத்தம் தாலுகா செய்தியாளர்