நெல்லை, மார்ச் 25:
நெல்லை மாவட்டம் நாங்குனேரி அருகே நெல்லையப்பபுரம் பகுதியில், விவசாயி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, அவரது மகள் தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 6 நாட்களுக்கு முன்பு, ஆறுமுகம் என்ற விவசாயி மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் குற்றவாளிகள் இன்னும் அடையாளம் காணப்படாததால், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையில், கொலையாளிகளை விரைவில் கைது செய்வோம், முதலில் உடலை பெற்றுக்கொள்ளுங்கள் என போலீசார் அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால், குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட பின்னரே உடலைப் பெறுவோம் என ஆறுமுகத்தின் குடும்பத்தினர் மறுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த மனஅழுத்தத்தின் நிலையில், ஆறுமுகத்தின் மகள் பேபி கனி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அவர் தனது கையில், “என் அப்பாவை அடக்கம் செய்யும் இடத்தின் அருகே என்னையும் அடக்கம் செய்யுங்கள்” என்று எழுதி வைத்திருந்தது சம்பவத்தை மேலும் சோகமாக்கியுள்ளது.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு டுடே நிருபர் சந்திரமோகன், திண்டுக்கல்