கோமசுபாளையம் முகாம் சார்பில் நடைபெற்ற நிகழ்வில் பலர் பங்கேற்பு.
மதுரை மாநகர் மைய மாவட்டத்தில், கோமசுபாளையம் முகாம் சார்பில் புதிய பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம் 21.03.2026 அன்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை முகாம் செயலாளர் பி. முத்துக்குமார் தலைமை தாங்கினார். சு. கணேசன் வரவேற்புரை வழங்கினார். ச. மகேந்திரன் நன்றியுரை கூறினார்.
இந்த கூட்டத்தில் மைய மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ப. ரவிக்குமார், மண்டல பொது துணைச் செயலாளர் ப. கதிரவன், மேனாள் இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாவட்ட அமைப்பாளர் மு. முத்தமிழன் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு உரையாற்றினர்.
புதிய பொறுப்பாளர்களாக மாவட்ட பொருளாளர் தீக்கதிர் தமிழ்வாணன், மாவட்ட துணைச் செயலாளர் திருமா கணேசன், செய்தி தொடர்பாளர் மதுரை முனீஸ், இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாவட்ட செயலாளர் அம்பேத் சீனி, மாவட்ட துணைச் செயலாளர் புனிதன் ஆகியோர் அறிமுகப்படுத்தப்பட்டனர்.
மேலும், அன்னை இந்திரா நகர் பகுதி பொறுப்பாளர்களாக மா.கா. ஆனந்த், பாலா, போது ராஜா, சதீஷ் பாண்டி ஆகியோரும், கோமசுபாளையம் பகுதி முன்னணி பொறுப்பாளர்களாக சூ. தம்பித்துரை, கு. கார்த்திக், செ. சரவணன், முனியசாமி, ஆ. ரகுராம் சுந்தர், விஜயகுமார், நவீன் வளவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் பல்வேறு தோழர்கள் திரளாக கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
வசந்தகுமார், மதுரை மாவட்ட செய்தியாளர்
