தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 முன்னிட்டு, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேர்தல் பணிகள் தொடர்பான விரிவான ஆய்வுக்கூட்டம் (19.03.2026) நடைபெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையேற்றார். தேர்தல் பொது பார்வையாளர்கள் ஷாலினி பண்டிட், பாவ்சாஹேப் தாங்கடே, ஓம் பிரகாஷ் வர்மா மற்றும் செலவின பார்வையாளர்கள் ராகுல் சோஹீ, வினீத் குமார், விபுல் சாவ்டா, கௌதம் சிங் சவுத்ரி, சுமித் தஸ்குப்தா ஆகியோர் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது.
📌 ஆய்வு செய்யப்பட்ட தொகுதிகள்:
செஞ்சி
மயிலம்
திண்டிவனம்
வானூர்
விழுப்புரம்
விக்கிரவாண்டி
திருக்கோவிலூர்
📊 முக்கிய ஆய்வு அம்சங்கள்:
👉 வேட்பாளர்களின் தேர்தல் செலவினங்கள் மற்றும் விளம்பர கண்காணிப்பு
👉 மனு தாக்கல் பணிகளின் நிலை
👉 பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினரின் செயல்பாடு
👉 கைப்பற்றப்பட்ட ரொக்கம் மற்றும் பொருட்களின் பாதுகாப்பு நிலை
👉 தேர்தல் கட்டுப்பாட்டு அறை செயல்பாடு
👉 ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு பணிகள்
👉 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) ஒதுக்கீடு
👉 மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளின் அஞ்சல் வாக்குகள்
👉 வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி
👉 வாக்குச்சாவடி மையங்களில் அடிப்படை வசதிகள்
👉 வாக்கு எண்ணும் மைய முன்னேற்பாடுகள்
👉 புகார்கள் மற்றும் நடவடிக்கைகள்
👉 பதற்றமான வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள்
🖥️ கட்டுப்பாட்டு அறை ஆய்வு:
தொலைபேசி மூலம் வந்த புகார்கள்
cVigil செயலி மூலம் பதிவான புகார்கள்
ஊடக கண்காணிப்பு
பறக்கும் படை நடவடிக்கைகள்
இவைகள் அனைத்தும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.
👮 கலந்து கொண்டவர்கள்:
மாவட்ட காவல் கண்காணிப்பாளர்: வி.வி. சாய்பிரனித்
மாவட்ட வருவாய் அலுவலர்: அரிதாஸ்
தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் பல துறை அதிகாரிகள்
✅ அதிகாரிகள் தெரிவித்தது:
தேர்தல் பணிகள் அனைத்தும் இந்திய தேர்தல் ஆணைய விதிமுறைகளின்படி திட்டமிட்டு, வெளிப்படையாகவும், சீராகவும் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது.
📍 விழுப்புரம் மாவட்டம்
✍️ செய்தியாளர்: சக்திவேல் விஜயன்