Mon. Mar 23rd, 2026

தர்மபுரி, மார்ச் 19:

அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்ட பொம்மிடி ரயில் நிலையத்தின் திறப்பு விழாவின்போது, மத்திய ரயில்வே இணை அமைச்சர் வி. சோமன்னா 2026 மார்ச் 1 அன்று பொம்மிடி வருகை தந்தார்.

அப்போது, பொம்மிடி பொதுமக்கள் மற்றும் ரயில் பயணிகள் நலச் சங்கம் சார்பில், முக்கியமான நான்கு ரயில்களுக்கு பொம்மிடியில் நிறுத்தம் வழங்க வேண்டும் என மனு அளிக்கப்பட்டது.

அதில்,

மைசூர் எக்ஸ்பிரஸ் (16315/16316) – பெங்களூரு பயணிகளின் வசதிக்காக,

கோவை எக்ஸ்பிரஸ் (12675/12676) – கோயம்புத்தூர் நோக்கி பகல் நேர பயணத்திற்காக,

திருவனந்தபுரம் மெயில் (12623/12624) – சென்னை நோக்கி அதிகாலை பயணத்திற்காக,

நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் (16339/16340) – தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளின் தேவைக்காக


பொம்மிடியில் நிறுத்தம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

இதுகுறித்து, மத்திய இணை அமைச்சர் வி. சோமன்னா, சங்க செயலாளர் பா. ஜெபசிங் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், இந்த கோரிக்கையை பரிசீலித்து தேவையான நடவடிக்கை எடுக்க ரயில்வே அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கைக்காக, பொம்மிடி பொதுமக்கள் மற்றும் ரயில் பயணிகள் நலச் சங்கம் சார்பில் அமைச்சருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
வே. பசுபதி
தமிழ்நாடு டுடே
மக்கள் செய்தி தொடர்பு அதிகாரி



By TN NEWS