தருமபுரி, மார்ச் 18:
திராவிட முன்னேற்ற கழகத்தின் (தி.மு.க.) சார்பில் தருமபுரி மேற்கு மாவட்ட அவசர செயற்குழு கூட்டம் காரிமங்கலம் மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டம், கழக தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கழக இளைஞரணி செயலாளர் மற்றும் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் வழிகாட்டுதலின்படியும், வடக்கு மண்டல பொறுப்பாளர் மற்றும் பொதுப்பணி, நெடுஞ்சாலை, சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ. வேலு, தருமபுரி மாவட்ட பொறுப்பு அமைச்சர் மற்றும் வேளாண்மை, உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் வழங்கிய அறிவுறுத்தலின்படியும் நடைபெற்றது.
மார்ச் 18ஆம் தேதி காலை 11 மணியளவில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு மாவட்ட கழக அவைத்தலைவர் கே. மனோகரன் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்) தலைமையேற்றார். தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர், வழக்கறிஞர் ஆ. மணி முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில், மாவட்ட கழக செயலாளர் முனைவர் பெ. பழனியப்பன், மார்ச் 16ஆம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற மாவட்ட கழக செயலாளர் கூட்டத்தில், கழக தலைவர் மற்றும் முதலமைச்சர் வழங்கிய 2026 சட்டப்பேரவை தேர்தல் தொடர்பான ஆலோசனைகள் குறித்து விளக்கமளித்தார்.
இந்நிகழ்வில் மாநில நிர்வாகிகள் சூடப்பட்டி சுப்பிரமணி, கொ. ரமேஷ், மாவட்ட பொருளாளர் முருகன், மாவட்ட துணை செயலாளர் இராஜகுமாரி மணிவண்ணன், தலைமை செயற்குழு உறுப்பினர் மனோகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும், மாவட்ட, ஒன்றிய, பேரூர் கழக செயலாளர்கள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகளும் பெருமளவில் பங்கேற்றனர்.
வே. பசுபதி
தமிழ்நாடு டுடே மக்கள் செய்தி தொடர்பு அதிகாரி