Thu. Mar 19th, 2026

மார்ச் 18: குடியாத்தம் காக்காதோப்பு பகுதியில் அமைந்துள்ள அத்தி கல்விக் குழுமம், கம்பன் கழகம் மற்றும் தமிழ் சங்கம் இணைந்து, இலக்கியச் செல்வர் “தகைசால் தமிழர்” விருது பெற்ற திரு. குமரி அனந்தன் அவர்களின் 93வது பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி மாணவ-மாணவிகளுக்கான கட்டுரை மற்றும் பல்வேறு போட்டிகள் நடத்தின.

வரவேற்பு மற்றும் நினைவுகள் பகிர்வு….!
இந்த நிகழ்வில் மனநல சிகிச்சை நிபுணரும் குமரி அனந்தனின் மகனுமான திரு. கீதன் வரவேற்புரை வழங்கி, தனது தந்தை மற்றும் சகோதரியைப் பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.

பரிசளிப்பு மற்றும் தலைமை உரை…!
அத்தி மருத்துவமனையின் தலைமை மருத்துவரும் சிறுநீரக நிபுணருமான டாக்டர் பெ. சௌந்தரராஜன் தலைமையேற்று, மாணவர்கள் தமிழ் பற்றும் மொழித் திறனும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.
போட்டிகளில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு ரூ.5000, ரூ.3000, ரூ.2000 ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் 10 மாணவர்களுக்கு சிறப்பு பரிசாக தலா ரூ.1000 மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

விருந்தினர்களின் உரைகள்…!
கம்பன் கழக நிறுவனர் ஜே.கே.என். பழனி, மாணவர்கள் தமிழ் மொழியில் சிறந்து விளங்க வேண்டும் என சிறப்புரை ஆற்றினார்.
தமிழ் சங்க துணைத் தலைவர் மற்றும் வழக்கறிஞர் கே. எம். பூபதி, திருக்குறள் போதனைகளை உணர்ந்து வாழ வேண்டும் என கூறினார்.

குமரி அனந்தனின் நெருங்கிய நண்பர் திரு. அருணாச்சலம், அவருடன் இருந்த போராட்ட கால அனுபவங்களையும் தமிழ் பற்றையும் பகிர்ந்தார்.
தமிழ் சங்க பொதுச் செயலாளர் முனைவர் சம்பத் குமார், “நீங்களும் பேச்சாளராகலாம்” என்ற புத்தகத்தை அறிமுகப்படுத்தி நோக்கவுரை வழங்கினார்.

பங்கேற்பு:
நிகழ்ச்சியில் திரு. ஏ.ஜே.ஏ. கார்த்திகேயன், அத்தி மருத்துவமனை கிளை தலைமை மருத்துவர் டாக்டர் ஆ. கென்னடி, குடியாத்தம் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் கே. குமரவேல், அத்தி இயற்கை மற்றும் யோகா மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் மகேஷ் ராஜாமணி, அத்தி செவிலியர் கல்லூரி முதல்வர் டாக்டர் பால்ராஜ் சீனித்துரை, குழந்தை நல மருத்துவர் டாக்டர் ஹேமலதா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

மேலும், அத்தி மருத்துவமனை நிர்வாக அலுவலர் சரவணன், மருத்துவர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள், செவிலியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

நன்றி மற்றும் ஒருங்கிணைப்பு…!
கம்பன் கழக பொருளாளர் திரு. சிவகுமார் நன்றியுரை வழங்கினார்.
அத்தி கல்விக் குழும அறங்காவலர் டாக்டர் சௌ. சுகநாதன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

By TN NEWS