Thu. Mar 19th, 2026

மார்ச் 18: வேலூர் மாவட்டம் குடியாத்தம் (தனி) சட்டமன்றத் தொகுதியை முன்னிட்டு, 2026 தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று காலை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு தேர்தல் அலுவலரும் வருவாய் கோட்டாட்சியருமான செல்வி சுபலட்சுமி தலைமை தாங்கினார். உதவி தேர்தல் அலுவலரும் வட்டாட்சியருமான சந்தோஷ் வரவேற்புரை வழங்கினார்.

தேர்தல் மேற்பார்வையாளர் ஆலோசனைகள்
தேர்தல் மேற்பார்வையாளர் Mr. Mir Tariq Ali, I.A.S., கலந்து கொண்டு தேர்தல் நடைமுறைகள் குறித்து விரிவான ஆலோசனைகள் வழங்கினார்.
அவர் கூறிய முக்கிய அம்சங்கள்:

வேட்புமனு தாக்கலுக்கான உறுதிமொழி பத்திரத்தில் அனைத்து விவரங்களும் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டிருக்க வேண்டும்.

வேட்பாளர் வேறு சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த வாக்காளராக இருந்தால், சம்பந்தப்பட்ட தேர்தல் பதிவுத் அதிகாரி (ERO) மூலம் சான்று பெற வேண்டும்.

SC/ST பிரிவைச் சேர்ந்தவர்கள் உரிய சாதி சான்றிதழை வட்டாட்சியரிடம் இருந்து பெற வேண்டும்.


அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்பு
இந்தக் கூட்டத்தில் பேர்ணாம்பட்டு வட்டாட்சியர் ராஜ்குமார், துணைக் காவல் கண்காணிப்பாளர் சுரேஷ், சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் ரேவதி தேவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும், அதிமுக நகர செயலாளர் ஜே.கே.என். பழனி, திமுக நகர செயலாளர் எஸ். சௌந்தர்ராஜன், புதிய நீதி கட்சி நகர செயலாளர் ரமேஷ், பாஜக நிர்வாகி ஸ்ரீகாந்த், பாமக சார்பில் குமார், கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சாமிநாதன் உள்ளிட்ட பல அரசியல் கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்

By TN NEWS