Thu. Mar 19th, 2026

அரூர் மாவட்ட திராவிடர் கழக மகளிர் அணி மற்றும் மகளிர் பாசறை சார்பில், உலக மகளிர் தினத்தையும் அன்னை மணியம்மையார் 107வது பிறந்தநாளையும் முன்னிட்டு சிறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி, அரூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் இராஜேந்திரன் இல்லத்தில் நடைபெற்றது.

தலைமை மற்றும் வரவேற்பு:
நிகழ்ச்சிக்கு மாவட்ட மகளிர் அணி தலைவர் ஆர். மணிமேகலை தலைமை தாங்கினார். மாவட்ட மகளிர் பாசறை தலைவர் பெ. கல்பனா வரவேற்புரை வழங்கினார். மகளிர் அணி பொறுப்பாளர்கள் வேப்பிலைப்பட்டி சுசிலா, கலா, வேளாங்கண்ணி, ஜான்சிராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாலை அணிவித்து தொடக்கம்:
“அன்னை மணியம்மையார் வாழ்க, தொண்டரத்தாய் அன்னை மணியம்மையார் புகழ் ஓங்குக” என்ற முழக்கங்களுடன், மாநில மகளிர் அணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி மற்றும் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் அரூர் சா. இராஜேந்திரன் இணைந்து அன்னை மணியம்மையார் படத்திற்கு மாலை அணிவித்து நிகழ்ச்சியை தொடங்கினர்.

கருத்தரங்கம் நடைபெற்றது:
அன்னை மணியம்மையார் பிறந்தநாளையும் உலக மகளிர் தினத்தையும் முன்னிட்டு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பெரியார் பெருந்தொண்டரும், மாவட்ட பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற தலைவருமான கவிஞர் கண்ணிமை தலைமை தாங்கினார்.

மாவட்ட தலைவர் அ. தமிழ்செல்வன், ஒன்றிய பகுத்தறிவாளர் கழகத் தலைவர் கட்டரசம்பட்டி ராமச்சந்திரன், விடுதலை வாசகர் வட்ட பொறுப்பாளர் கோ. தனசேகரன், மாவட்ட இளைஞரணி செயலாளர் சஞ்சீவன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

பல்வேறு தலைப்புகளில் உரைகள்
கருத்தரங்கத்தில்,

தகடூர் தமிழ்ச்செல்வி – “தந்தை பெரியாரை பாதுகாத்த அன்னை மணியம்மையார்”

இயக்குநர் மாரி கருணாநிதி – “பெண்ணுரிமை போராளி தந்தை பெரியார்”

கவிஞர் கீரை பிரபாகரன் – “பாரதிதாசன் பார்வையில் பெண்கள்”

ஆசிரியர் ச. அறிவுமணி – “உலகை ஆளும் பெண்ணினம்”

ஆசிரியர் ஆ. நாகராஜ் – “பெண்களின் நிலை அன்றும் இன்றும்”

கவிஞர் சுதாகர் – “சமுதாய முன்னேற்றத்தில் மகளிர் பங்கு”

ஆசிரியர் அரசு – “நகைச்சுவையே நல்மருந்து”

கவிஞர் மு. பிரேம்குமார் – “மகளிர் உரிமையும் திராவிட ஆட்சி”

என பல்வேறு தலைப்புகளில் உரையாற்றினர்.

நிறைவுரை மற்றும் நன்றியுரை:
நிகழ்ச்சியின் நிறைவாக தலைமை கழக ஒருங்கிணைப்பாளர் ஊமை ஜெயராமன் நிறைவுரையாற்றினார். தொடர்ந்து மாவட்ட மகளிர் அணி செயலாளர் பெ. உமா சமூக சிந்தனை கொண்ட பாடல்களைப் பாடி, நன்றியுரை வழங்கினார்.

வே. பசுபதி, மக்கள் செய்தி தொடர்பு அதிகாரி.

By TN NEWS