மார்ச் 17: விசாரணைக்கு முன்பே தேர்தல் அட்டவணையை அறிவிக்க வேண்டும் என்ற நோக்கில் இந்தியத் தேர்தல் ஆணையம் அவசரமாக செயல்பட்டதா என மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் பேராசிரியர் மு. ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், இந்தியத் தேர்தல் ஆணையம் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான அட்டவணையை வெளியிட்டிருப்பது அசாதாரண அவசர நடவடிக்கையாகத் தோன்றுகிறது என்று கூறப்பட்டுள்ளது.
அட்டவணை குறித்த அதிருப்தி
தேர்தல் அறிவிக்கும் நாளிலேயே வேட்புமனு தாக்கல் தொடங்குவது மற்றும் ஒரு வாரத்திற்குள் அது முடிவடையும் வகையில் கால அட்டவணை நிர்ணயிக்கப்பட்டிருப்பது அரசியல் கட்சிகளுக்கும் வேட்பாளர்களுக்கும் சிரமத்தை ஏற்படுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.
முன்கூட்டியே தேர்தல் நடத்தல் குறித்து கேள்வி
ஜூன் மாதத்தில் அமைக்கப்பட வேண்டிய சட்டமன்றத்திற்கான தேர்தலை, ஏப்ரல் 9ஆம் தேதியே நடத்தி, மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்படுவது ஏன் என்ற கேள்வியும் பொதுமக்களிடையே எழுந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு – புதுச்சேரி இணைத் தேர்தல் சாத்தியம்
தமிழ்நாடும் புதுச்சேரியும் அரசியல், கலாச்சாரம், சமூக ரீதியாக இணைந்த பகுதிகள் என்பதால், இரு மாநிலங்களிலும் ஒரே நாளில் தேர்தல் நடத்தப்பட்டிருந்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள், மதுக்கடத்தல், பணப்பரிவர்த்தனை மற்றும் கள்ளவோட்டு போன்ற முறைகேடுகளை கட்டுப்படுத்த எளிதாக இருந்திருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
முன்னைய நடைமுறைக்கு மாறான தீர்மானம்
கடந்த 30 ஆண்டுகளாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஒரே தேதியில் தேர்தலை சந்தித்த நிலையில், இம்முறை மட்டும் புதுச்சேரிக்கு தனியாக முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படுவதற்கான காரணம் குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
நீதிமன்ற வழக்குடன் தொடர்பு?
மேலும், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் காரணமாகவே இந்த அவசரம் காட்டப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த 14 ஆண்டுகளாக நடத்தப்படாத உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் சட்டமன்றத் தேர்தலை நடத்தக்கூடாது என்ற மனுவை ஏற்று, நீதிமன்றம் 14 நாட்களுக்குள் பதில் அளிக்க தேர்தல் ஆணையத்திற்கும் புதுச்சேரி அரசுக்கும் உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
வரும் 20ஆம் தேதி தேர்தல் ஆணையம் தனது பதிலை அளிக்க வேண்டிய நிலையில், வழக்கு விசாரணைக்கு முன்பே தேர்தல் அட்டவணையை அறிவிக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கலாம் என மு. ராமதாஸ் தெரிவித்துள்ளார்.