பழனி அடிவாரம் நோக்கி இயங்கும் KT.GIRI (TN 57 AR 6408) என்ற எண்ணில் இயங்கும் தனியார் சிற்றுந்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மேற்கொண்ட அலட்சியமான செயல்பாடு பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பயணிகள் கூறுகையில், பேருந்தில் அதிக சத்தத்தில் பாடல்கள் ஒலிக்கவிட்டு, நடத்துநர் விசில் மூலம் பாடல்களுக்கு இசை சேர்த்துக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் வழக்கமான கவனம் குறைந்து, சில பஸ் நிறுத்தங்கள் கவனிக்கப்படாமல் வாகனம் சென்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும், ஒரு இடத்தில் பஸ் நிறுத்தம் இருந்தபோதும், நடத்துநர் சிக்னல் அளித்த பின்னரும் ஓட்டுநர் அதை சரியாக கவனிக்காமல் பஸ் நிறுத்தத்தை கடந்து சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இது பயணிகள் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் சம்பவமாக பார்க்கப்படுகிறது.
பழனி மலை கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தரும் நிலையில், இத்தகைய அலட்சிய செயல்பாடுகள் எந்த நேரத்திலும் பெரும் விபத்துக்கு வழிவகுக்கும் அபாயம் உள்ளது என பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து போக்குவரத்து காவல்துறை மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட ஓட்டுநர் மற்றும் நடத்துநரின் உரிமங்கள் மற்றும் ஆவணங்களை சரிபார்த்து, தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், எதிர்காலத்தில் இதுபோன்ற செயல்பாடுகள் நடைபெறாதவாறு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.