Thu. Mar 19th, 2026

குடியாத்தம், மார்ச் 16:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் சட்டமன்ற தொகுதியில் அமலில் உள்ள தேர்தல் நடத்தை விதி முறையின் கீழ் நடத்தப்பட்ட சோதனையில் ரூபாய் 1 லட்சத்து 85 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

வாகன சோதனையில் பணம் கண்டுபிடிப்பு.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பலமனேர் பகுதியைச் சேர்ந்த விசுவநாதர் என்பவர் வியாபார தொடர்பாக ரூ.1.85 லட்சம் பணத்துடன் வேலூர் நோக்கி பயணம் செய்துள்ளார்.

அப்போது குடியாத்தம் அருகிலுள்ள சித்தூர் கேட் பகுதியில் பறக்கும் படை-2 அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். பேரணாம்பட்டு துணை வட்டார வளர்ச்சி அலுவலர் லட்சுமி தலைமையில் நடைபெற்ற சோதனையில், விசுவநாதர் கொண்டு வந்திருந்த பணம் அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டது.

அதிகாரிகளிடம் ஒப்படைப்பு.

இந்த சோதனையில் சுந்தரேசன் (SSI), சரிதா (WHC) உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். பறிமுதல் செய்யப்பட்ட பணம் தொடர்பாக வருவாய் கோட்டாட்சியர் செல்வி சுபலட்சுமி மற்றும் வட்டாட்சியர் சந்தோஷ்குமார் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

கே.வி. ராஜேந்திரன்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர்

By TN NEWS