Tue. Mar 17th, 2026

சுரண்டை | தென்காசி மாவட்டம்

சமையல் எரிவாயு தட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு:



சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கத் தவறி விட்டதாகக் குற்றம்சாட்டி, திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் தென்காசி மாவட்டம் சுரண்டையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முக்கிய தலைவர்கள் பங்கேற்பு:
தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் ஜெயபாலன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராணி குமார் மற்றும் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ். பழனி நாடார் ஆகியோர் கலந்து கொண்டு மத்திய அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்தனர். சமையல் எரிவாயு விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு பொதுமக்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.

கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்:

இந்த ஆர்ப்பாட்டத்தில் மதிமுக சார்பில் துரைமுருகன், தேமுதிக சார்பில் சேர்மன், எஸ்டிபிஐ கட்சியின் தொகுதி செயலாளர்கள் ஜாகிர் உசேன், செய்யத் அலி பாதுஷா, சுரண்டை நகர செயலாளர் அமல்ராஜ், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பாக்கியராஜ், சுரண்டை நகராட்சி சேர்மன் வள்ளி முருகன், ஏ.கே. சேர்ம செல்வம், சண்முகவேல், காங்கிரஸ் நகர தலைவர் எஸ்.கே.டி. ஜெயபால், சுரண்டை நகரச் செயலாளர் கணேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு:

இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு, சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை உடனடியாக சரிசெய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

செய்தி:
அமல்ராஜ்
தென்காசி மாவட்டம் தலைமை செய்தியாளர்

By TN NEWS