கடலூர் மாவட்டம், சிதம்பரம்:
தேசிய முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பில் ஒன்றிய அரசின் கொள்கைகளை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் சிதம்பரத்தில் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மூவேந்தர் முன்னேற்றக் கழக தலைவர் ஜி. எம். ஸ்ரீதர் வாண்டையார் தலைமை தாங்கினார். மேலும், தி.மு.க. கட்சியின் கடலூர் கிழக்கு மாவட்ட பொருளாளர் எம்.ஆர்.கே.பி. கதிரவன் முன்னிலை வகித்தார்.
இந்த நிகழ்ச்சியில் தேசிய முற்போக்கு கூட்டணியைச் சேர்ந்த பல்வேறு கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், “தமிழகத்திற்கு ஒன்றிய அரசு எந்த முக்கிய திட்டங்களையும் வழங்கவில்லை”, “சமையலுக்கு பயன்படும் எரிவாயு சிலிண்டர் கூட பொதுமக்களுக்கு கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது” என குற்றஞ்சாட்டி கண்டன கோஷங்களை எழுப்பினர்.
மேலும், பொதுமக்களின் வாழ்வாதார சிக்கல்களை கருத்தில் கொண்டு தமிழகத்திற்கு தேவையான திட்டங்களை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.
சிவக்குமார், சிதம்பரம் செய்தியாளர்