50 படுக்கை வசதியுடன் அதிநவீன சிகிச்சை பிரிவு – சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் திறந்து வைத்தார்.
அணைக்கட்டு | மார்ச் 15.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட 50 படுக்கை வசதிகளுடன் கூடிய புதிய அதிநவீன அரசு மருத்துவமனை மக்கள் பயன்பாட்டிற்காக நேற்று திறந்து வைக்கப்பட்டது.
இந்த மருத்துவமனையை அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி. நந்தகுமார் திறந்து வைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார்.
மக்களின் மருத்துவ தேவைக்கு முக்கிய திட்டம்:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் நல்வாழ்த்துகளுடன், அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதி மக்களின் மருத்துவ தேவைகளை சிறப்பாக பூர்த்தி செய்யும் வகையில் இந்த மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
அனைத்து தரப்பு மக்களுக்கும் தரமான மற்றும் அதிநவீன மருத்துவ சேவைகளை வழங்குவது அரசின் முக்கிய நோக்கமாக இருப்பதாகவும் கூறப்பட்டது.
அதிகாரிகள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்பு:
வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி சுப்புலட்சுமி IAS தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில்,
மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் மு. பாபு
மருத்துவமனை இயக்குநர்
மத்திய ஒன்றிய செயலாளர் பி. வெங்கடேசன்
கிழக்கு ஒன்றிய செயலாளர் கோ. குமரபாண்டியன்
உள்ளிட்டோர் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நமது சிறப்பு நிருபர்