செஞ்சி மார்ச் 12
விழுப்புரம் வடக்கு மாவட்டம் செஞ்சி சட்டமன்றத் தொகுதியில் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் மாற்று கட்சியினரின் இணைப்பு நிகழ்ச்சி செஞ்சியில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சி செஞ்சி கிழக்கு ஒன்றிய செயலாளரும் ஒன்றிய பெருந்தலைவருமான விஜயகுமார் ஏற்பாட்டில் நடைபெற்றது. செஞ்சி கிழக்கு ஒன்றிய பாமக முன்னாள் ஒன்றிய செயலாளர் பிரபு தலைமையில் ஒட்டம்பட்டு, திருவதிகுணம் மற்றும் சிட்டாம்பூண்டி ஆகிய ஊராட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திமுகவில் இணைந்தனர்.
25க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைப்பு
பாமக உள்ளிட்ட மாற்று கட்சிகளைச் சேர்ந்த கார்த்தி, வினோத், தீனதயாளன், தமிழ், ஆனந்த், பர்கத், பிரகாஷ், குமார், முருகன், சஞ்சய், சங்கர், ஜெயகுமார் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்டோர் தங்களது கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்தனர்.
இந்த இணைப்பு நிகழ்ச்சி விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ முன்னிலையில் நடைபெற்றது.
சால்வை அணிவித்து வரவேற்பு
திமுகவில் இணைந்த அனைத்து நிர்வாகிகளுக்கும் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ சால்வை அணிவித்து வரவேற்று வாழ்த்தினார். மேலும் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் அனைவரும் ஒருங்கிணைந்து கடுமையாக உழைத்து, திமுக தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் கரத்தை வலுப்படுத்த வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
பலர் கலந்து கொண்டனர்
இந்த நிகழ்ச்சியில் செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் அலி மஸ்தான், பொதுக்குழு உறுப்பினர் மணிவண்ணன், செஞ்சி நகர செயலாளர் கார்த்திக், ஒன்றிய அவைத் தலைவர் வாசு, மாவட்ட பிரதிநிதி அய்யாதுரை, செஞ்சி ஒன்றிய வரதகர் அணி அமைப்பாளர் விநாயகமூர்த்தி, தொண்டரணி பாஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
செய்தி & புகைப்படம்:
சக்திவேல் விஜயன் / கே. மாரி
விழுப்புரம் மாவட்டம்