Tue. Mar 10th, 2026

வேலூர், மார்ச் 6:

தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் ஆதரவுடன், வேலூர் மற்றும் குடியேற்றம் பகுதிகளில் மாணவர்களுக்காக நடத்தப்பட்ட திருக்குறள் திருப்பணி பயிற்சி வகுப்பின் நிறைவு விழா நடைபெற்றது.

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு உலகத்திருவள்ளுவர் பேரவையின் தலைவர் வைர ஜெ. அன்பு தலைமை தாங்கினார்.

சாதனை கல்வி மையத்தின் தலைவர் மற்றும் திருக்குறள் திருப்பணி ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் முனைவர் பா. சம்பத் குமார் வரவேற்புரை வழங்கினார்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக திருக்குறள் மா.தி.சி குப்பன், முன்னாள் தமிழ் இயக்க நகர செயலாளர் ஆசிரியர் தமிழ்செல்வன், நல்லாசிரியர்கள் மீனாட்சி, பார்வதி, சிவசங்கரி, குடியேற்றம் ஒன்றிய செயலாளர் முனைவர் மோ. மது, கிரீன்வேலி பள்ளி தாளாளர் ஆயிஷா ஜாவித், புலவர் முகம்மது அலி, கவிஞர் பைசல் அகமது, திருக்குறள் செல்வராசு, பள்ளிகொண்டா பேரூராட்சி செயலாளர் வெட்டுவானம் பாலாஜி, உலகத்திருவள்ளுவர் பேரவையின் பொருளாளர் ஆசிரியர் ஜெய்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மேலும் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர். வேலூர் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற 50 மாணவர்களுக்கும், குடியேற்றம் சாதனை கல்வி மையத்தில் பயிற்சி பெற்ற 150 மாணவர்களுக்கும் பயிற்சி நிறைவு செய்ததற்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியின் இறுதியில் சாதனை கல்வி மையத்தின் முதல்வர் ஆசிரியர் திருமதி ஜமுனா சம்பத் குமார் நன்றியுரை வழங்கினார்.

செய்தி: கே.வி. ராஜேந்திரன்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர்



By TN NEWS