Tue. Mar 10th, 2026

திருப்பத்தூர், மார்ச் 10:

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட அரசினர் தோட்டம் பகுதியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட பூங்கா திறப்பு விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சி நகர்மன்ற தலைவர் சங்கீதா வெங்கடேஷ் தலைமையில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி பூங்காவை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சியும், தியான கூடம் திறப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் நகர திமுக செயலாளர் ராஜேந்திரன், நகராட்சி ஆணையர் சாந்தி, நகர்மன்ற துணைத் தலைவர் சபியுல்லா, நகராட்சி பொறியாளர் நக்கீரன், நகர்மன்ற உறுப்பினர் அபிராமி பாரத், பசுமை யோகா மைய நிர்வாகிகள் ஸ்ரீதர், பிரேம்குமார், நேரு, பாபு மற்றும் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

செய்தி: சதீஷ்குமார்
ஒளிப்பதிவு: ரகுநாதன்
திருப்பத்தூர் மாவட்டம்



By TN NEWS