வேலூர், மார்ச் 6:
வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டம் வன்டறந்தாங்கல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
இந்த அறிவியல் கண்காட்சியை ஊராட்சி மன்ற தலைவர் ராகேஷ் தொடக்கி வைத்து மாணவர்களின் அறிவியல் படைப்புகளை பார்வையிட்டார். மேலும் பள்ளிக்காக 7 மின்விசிறிகளையும் வழங்கினார்.
நிகழ்ச்சியில் காட்பாடி வட்டார கல்வி அலுவலர் எம். ஜெயராஜ் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட செயலாளர் முனைவர் செ. நா. ஜனார்த்தனன் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் எம். குப்புராமன் தலைமை தாங்கினார். முன்னதாக பட்டதாரி ஆசிரியை மேரி செல்வராணி வரவேற்புரை வழங்கினார்.
இந்த கண்காட்சியில் பள்ளியில் பயிலும் 146 மாணவர்கள் கலந்து கொண்டு 43 தலைப்புகளில் அறிவியல் படைப்புகளை காட்சிப்படுத்தினர். நான்காம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் தங்களது அறிவியல் முயற்சிகளை செய்முறை விளக்கத்துடன் தமிழிலும் ஆங்கிலத்திலும் விளக்கினர்.
இந்த நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் பாபு, குணசீலி, நிர்மலா தேவி, சஞ்சீவியா மற்றும் செல்வி ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பாக ஒருங்கிணைத்தனர்.
செய்தியாளர்:
தி. தென்பாண்டியன்
வேலூர் மாவட்டம்