திண்டுக்கல், மார்ச் 4
திண்டுக்கல்–திருச்சி சாலையில் உள்ள காட்டாஸ்பத்திரி பேருந்து நிறுத்தம் அருகில் கட்டுமானத் தொழிலாளர்களின் பயன்பாட்டிற்காக புதிதாக அமைக்கப்பட்டுள்ள உழைப்பாளர் நலக்கூடம் திறப்பு விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் செ. சரவணன், இ.ஆ.ப., மற்றும் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சச்சிதானந்தம் ஆகியோர் கலந்து கொண்டு நலக்கூடத்தை திறந்து வைத்து, பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
நிகழ்ச்சியில் பழனி சட்டமன்ற உறுப்பினர் இ.பெ. செந்தில்குமார், திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதிபிரகாஷ், திண்டுக்கல் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) இரா. இராஜ்குமார், மாநகராட்சி துணை மேயர் ச. ராஜப்பா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அதிகாரிகள் பலரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர்
ராமர்