Thu. Mar 5th, 2026

திருநெல்வேலி:
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் நேற்று நடைபெற்ற இரட்டை கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் தொடர்புடையதாக 7 பேரை காவல்துறை கைது செய்துள்ளது.

நாங்குநேரி அருகே நேற்று இரவு இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், தென் மண்டல ஐஜி மற்றும் நெல்லை சரக டிஐஜி சம்பவ இடத்திற்குச் சென்று நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த சம்பவம் தொடர்பாக தமிழக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி மகேஸ்வர் தயாள் தலைமையில் பல்வேறு ஆலோசனைகள் நடைபெற்றன. பின்னர் குற்றவாளிகளை விரைவாக பிடிக்க 14 தனிப்படை போலீசார் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக சம்பவத்தில் தொடர்புடையதாக 7 பேரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய பிற நபர்களை கண்டறியும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தமிழ்நாடு டுடே
கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்: ஷாலு V. J

By TN NEWS