Wed. Mar 4th, 2026

செஞ்சி, பிப் 03

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், திமுக வழக்கறிஞர் அணி சார்பில் மு.க.ஸ்டாலின் அவர்களின் 73வது பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்வில், அன்னை தெரேசா முதியோர் இல்லத்தில் உள்ள முதியோர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டதுடன், இளம் வழக்கறிஞர்களுக்கு பயிற்சி சட்டப் புத்தகங்களும் வழங்கப்பட்டன. மேலும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு அரசு வழக்கறிஞர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். செஞ்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் விஜயகுமார் மற்றும் மாநில பொதுக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் மணிவண்ணன் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செஞ்சி மஸ்தான் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு, ஆதரவற்ற முதியோர் இல்லத்திற்கு நலத்திட்ட உதவிகளையும், இளம் வழக்கறிஞர்களுக்கு சட்டப் புத்தகங்களையும் வழங்கி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை, பார் அசோசியேஷன் சங்கத் தலைவர் பிரவீன், சங்க செயலாளர் அசாருதீன், அரசு வழக்கறிஞர் தமிழ்ச்செல்வி, கர்ணன், மாவட்ட வழக்கறிஞர் துணை அமைப்பாளர் சுதாகரன் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் அரிகிருஷ்ணன், மழைமேனி, பாண்டியன், முருகன், மணிகண்டன், வீரபாண்டியன், ஜெயக்குமார், நந்தினி, பத்மா, கலை, உத்தரவேலு, ராஜா, அரவிந்த்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழுப்புரம் மாவட்டம்
ஒளிப்பதிவாளர் கே. மாரி

By TN NEWS