விழுப்புரம், மார்ச் 03
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பகுதியில் அமைந்துள்ள செக்கோவர் தொண்டு நிறுவனம் அலுவலகத்தில், அனந்தபுரம் ரோட்டரி சமுதாய குழுமம் மற்றும் செக்கோவர் தொண்டு நிறுவனம் சார்பில் சிறந்த ஆசிரியர்களுக்கான விருது வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவிற்கு செக்கோவர் நிறுவன இயக்குநர் அம்பிகா சூசை ராஜ் தலைமை தாங்கினார். அனந்தபுரம் ரோட்டரி சமுதாய குழுமத்தின் முன்னாள் தலைவர் ஜேசு ஜூலியஸ் ராஜா முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக இ.கே.ஆர் மருத்துவமனை நிர்வாக இயக்குநர் டாக்டர் ஆனந்த முருகன் கலந்து கொண்டு, செஞ்சி மற்றும் விக்கிரவாண்டி தாலுக்கா பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கி பாராட்டினார். மேலும், கல்வியின் முக்கியத்துவம் குறித்து சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியை செக்கோவர் ஊழியர் சங்கீதா தொகுத்து வழங்கினார்.
இந்த நிகழ்வில் சூர்யா, ரவீந்திரன், ராஜாராம், அரவிந்தன், குலசேகர், அரசு, ராஜசேகர், சிவானந்தம், பிரசன்னா உள்ளிட்டோர் மற்றும் பல ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
விழுப்புரம் மாவட்டம்
ஒளிப்பதிவாளர் கே. மாரி