Wed. Mar 4th, 2026

மார்ச் 3

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகிலுள்ள பரதராமி வார சந்தையில் 2026–2027ஆம் ஆண்டிற்கான சுங்க வசூல் உரிமையை வழங்க பொதுஏலம் நடத்த திட்டமிடப்பட்டது.

இந்த ஏலம் குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலகம் வளாகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் சத்தியமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. ஏலத்தில் பங்கேற்க நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அதில் 15 பேர் மட்டுமே ஏலத்தில் பங்கேற்க தேவையான வைப்பு தொகையை செலுத்தினர்.

இந்நிலையில், ஒன்றிய துணைத்தலைவர் அருண்முரளி, ஏலம் நடத்தப்படுவது குறித்து ஒன்றிய துணைத்தலைவர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு முறையான தகவல் வழங்கப்படவில்லை என்று குற்றம்சாட்டி வெளிநடப்பு செய்தார். இதனால் நிகழ்விடம் கூச்சல், குழப்பம் ஏற்பட்டதால் ஏலம் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் வட்டார வளர்ச்சித்துறை அதிகாரிகள், ஊராட்சி மன்ற தலைவர்கள், காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

குடியாத்தம் தாலுகா
கே.வி. ராஜேந்திரன், செய்தியாளர்

By TN NEWS