Wed. Mar 4th, 2026

திண்டுக்கல் மாவட்டத்தில் ‘Coffee with Collector’ என்ற தலைப்பில் தேசிய மாணவர் படை (NCC) மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

மாவட்ட ஆட்சித் தலைவர் செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மாணவர்களுடன் நேரடியாக உரையாடி அவர்களின் இலக்குகள், போட்டித் தேர்வு தயாரிப்பு, சமூகப் பொறுப்பு மற்றும் தலைமைத் திறன் வளர்ச்சி குறித்து வழிகாட்டினார்.

இந்த நிகழ்வில் ஜி.டி.என். கலைக்கல்லூரி முதல்வர் முனைவர் சு.சரவணன், 14 தமிழ்நாடு தேசிய மாணவர் படை பட்டாலியன் பிரிவின் ஆபிசர் கமாண்டிங் லெப்டினெட் கர்னல் சு.ஜெகதீசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மாணவர்களுடன் நட்பு முறையில் நடந்த இந்த உரையாடல், நிர்வாகத் துறையில் உள்ள அனுபவங்களைப் பகிர்ந்து, இளைஞர்களை சமூகப் பணிகளில் ஈடுபட ஊக்குவிக்கும் வகையில் அமைந்தது.

திண்டுக்கல் மாவட்டம்
ராமர், செய்தியாளர்

By TN NEWS