திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், குஜிலியம்பாறை தாலுகா பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் ஆதார் அட்டை மற்றும் குடும்ப அட்டையை ஒப்படைக்கும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாளையம் கிராமத்தில் பொதுமக்கள் மயானமாக பயன்படுத்தும் இடத்தில் குடிநீர் வசதி, மயான காத்திருப்பு கூடம், சுற்றுச்சுவர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அமைத்து தருமாறு பல்வேறு முறை அதிகாரிகளிடம் மனுக்கள் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் அதிருப்தி அடைந்த கிராம மக்கள், தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தும் நோக்கில் ஆதார் அட்டை மற்றும் குடும்ப அட்டைகளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம் நடைபெற்ற நிலையில், அதிகாரிகள் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ராமர், செய்தியாளர்
திண்டுக்கல் மாவட்டம்