Mon. Mar 2nd, 2026

நிலக்கோட்டை ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில், எஸ்.ஆர்.எஸ் வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் வேளாண்மை கண்காட்சியை சிறப்பாக நடத்தினர்.

மாணவர்கள் சுகுமாறன், ரோஹித், சீனிவாசகன், சூரிய பிரசாத், சிபி சுதன், விஷ்ணு பிரபு, தாமரை செல்வன், பிரகாஷ் ஆகியோர் நவீன வேளாண்மை முறைகள், இயற்கை விவசாயம், உர மேலாண்மை, பூச்சி கட்டுப்பாடு மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கக் காட்சிகள் மூலம் விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனர்.

இந்த நிகழ்ச்சிக்கு நிலக்கோட்டை வேளாண்மை உதவி இயக்குநர் திருமதி உமா அவர்கள் தலைமை தாங்கினார். மேலும் கல்லூரி பேராசிரியர்கள், விவசாயிகள் மற்றும் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

இந்நிகழ்ச்சி விவசாயிகளுக்கு நவீன தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி, வேளாண்மை உற்பத்தியை மேம்படுத்த உதவும் வகையில் பயனுள்ளதாக அமைந்தது.

ராமர், செய்தியாளர்
திண்டுக்கல் மாவட்டம்

By TN NEWS