Sat. Feb 28th, 2026

Gudiyatham: வேலூர் மாவட்டம் குடியாத்தம் பழைய பேருந்து நிலையம் பகுதியில், தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் Bharatiya Janata Party (பாஜக) ஏற்பாட்டில் பிப்ரவரி 27 அன்று தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பாஜக நகரத் தலைவர் ஜெகன் தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் தசரதன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

இந்தக் கூட்டத்தில் கட்சியைச் சேர்ந்த சுகுமார், ஸ்ரீகாந்த், மஞ்சுநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மேலும், All India Anna Dravida Munnetra Kazhagam (அதிமுக) சார்பில் வி.இ. கருணா, ஜெயமணி பாபு, இ.டி. பாஸ்கர் உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் கொள்கைகள் மற்றும் திட்டங்கள் குறித்து விளக்கமாக பேசப்பட்டது.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர்
கே.வி. ராஜேந்திரன்

By TN NEWS