Fri. Feb 27th, 2026

‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தில் ரூ.3.50 லட்சம் வரை நிதியுதவி.

சென்னை :
தமிழகத்தில் குடிசை வீடுகளில் வசித்து வரும் ஏழை எளிய மக்களுக்கு பாதுகாப்பான, நிரந்தர வீடுகள் வழங்கும் நோக்கில் செயல்படுத்தப்படும் கலைஞர் கனவு இல்லம் திட்டத்திற்க்கு, தமிழ்நாடு அரசு ரூ.3,500 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.

இதன் மூலம், மாநிலம் முழுவதும் மேலும் ஒரு லட்சம் புதிய வீடுகள் கட்டப்படும் என அரசு அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் தகுதியான பயனாளிகள் புதிய வீடுகள் கட்டிக் கொள்ள ஒரு வீட்டிற்கு ரூ.3.50 லட்சம் வரை நிதியுதவி பெற முடியும்.

🎯 திட்டத்தின் நோக்கம் என்ன?

தமிழகத்தில் இன்னும் குடிசைகளில் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி,
பாதுகாப்பான, நிரந்தரமான கான்கிரீட் வீடுகளை வழங்குவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம்.

👉 2030-ஆம் ஆண்டிற்குள் “குடிசைகள் இல்லாத தமிழ்நாடு” என்ற இலக்கை அடைய இந்தத் திட்டம் வழிவகை செய்கிறது.

💰 ரூ.3,500 கோடி நிதி ஒதுக்கீடு – என்ன திட்டம்?

ஏற்கனவே 2 லட்சம் வீடுகள் கட்டுமானத்தில் உள்ளன

தற்போது மேலும் 1 லட்சம் வீடுகள்

மொத்த மதிப்பீடு: ரூ.3,500 கோடி

ஒரே தவணையில் அல்ல; பகுதி பகுதியாக வீடுகள் கட்டப்படும்

🏘️ மாவட்ட – ஊராட்சி வாரியாக வீடு ஒதுக்கீடு

அனைத்து மாவட்டங்களிலும் பயனாளிகள் தேர்வு

ஒவ்வொரு ஊராட்சிக்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் வீடுகள்

ஊராட்சி மன்ற தலைவர் அடங்கிய குழு மூலம் அறிவிப்பு

விண்ணப்பங்கள் பரிசீலனை செய்து பயனாளிகள் தேர்வு

📄 விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்

வீடு கட்டப்படும் இடத்தின் பத்திர நகல்

பட்டா & சிட்டா

ரேஷன் அட்டை

ஆதார் அட்டை

வங்கி கணக்கு விவரம்

வருமானச் சான்றிதழ்

முகவரி சான்று

தொலைபேசி எண்

பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்

📝 யார் விண்ணப்பிக்கலாம்?

✔️ குடிசையில் வசிப்பவர்கள்
✔️ சொந்தமாக பட்டா உள்ளவர்கள்
✔️ குறைந்தபட்சம் 360 சதுர அடி இடம் உள்ளவர்கள்

💸 நிதியுதவி எப்படி வழங்கப்படும்?

ஒவ்வொரு வீட்டிற்கும்: ரூ.3,50,000

மூன்று கட்டங்களாக

பயனாளியின் வங்கி கணக்கிற்கு நேரடியாக (DBT)

யாருக்கு வீடு கிடைக்காது?

ஏற்கனவே சொந்தமாக கான்கிரீட் வீடு உள்ளவர்கள்

குடிசையில் ஓடு / ஆஸ்பெஸ்டாஸ் / பகுதி கான்கிரீட் அமைப்பு உள்ளவர்கள்

புறம்போக்கு நிலத்தில் குடிசை அமைத்தவர்கள்

👥 பயனாளிகள் தேர்வு எப்படி?

ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்ட குழு தேர்வு

விண்ணப்ப விவரங்கள் முழுமையாக ஆய்வு

கிராம சபை ஒப்புதல் பெற்ற பிறகே இறுதி தேர்வு

அதிக விண்ணப்பங்கள் இருந்தால் முன்னுரிமை அடிப்படை

ℹ️ பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டியது.

வீடு கட்ட தேவையான சிமெண்ட், அரசு நிறுவனமான TANCEM மூலம் வழங்கப்படும்

இரும்பு கம்பிகளும் குறைந்த விலையில் வழங்கப்படும்

இதனால் பயனாளிகளின் நிதிச்சுமை குறையும்

👉 கூடுதல் விவரங்களுக்கு: உங்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்

ஷேக் முகைதீன்

By TN NEWS