Sat. Jan 10th, 2026

வேலூர் | ஜனவரி :
தமிழக முதல்வர் அவர்களின் பொங்கல் பரிசு குடும்ப அட்டை உள்ளவர்களுக்கு இன்று துவங்கி வைத்தார். இதன்படி இன்று வேலூர் தெற்கு மாவட்டம், அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதி, மேற்கு ஒன்றியம் சார்பில், பீஞ்சமந்தை ஊராட்சியில் பொங்கல் விழா மற்றும் பொதுமக்களுக்கு புடவை, வேட்டி, பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், வேலூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினருமான ஏ.பி. நந்தகுமார் கலந்து கொண்டு, பாரம்பரிய முறையில் பாணையில் பொங்கல் வைத்து விழாவை துவக்கி வைத்தார். தொடர்ந்து அவர் பேசுகையில், தமிழர் பண்பாடு, விவசாய மரபு மற்றும் சமூக ஒற்றுமையை கொண்டாடும் திருநாளாக பொங்கல் விளங்குகிறது என தெரிவித்தார்.

மேலும், தமிழக அரசு மக்களின் நலன் மற்றும் கலாச்சாரத்தை போற்றும் வகையில் இதுபோன்ற விழாக்களை முன்னெடுத்து வருவதாகவும், திராவிட மாடல் அரசின் கொள்கைகளுக்கு ஏற்ப பொதுமக்களுடன் இணைந்து பண்டிகைகள் கொண்டாடப்படுவது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து, விழாவில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு புடவை, வேட்டி மற்றும் பொங்கல் தொகுப்புகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், பெண்கள், முதியோர் மற்றும் குழந்தைகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு பொங்கல் விழாவை உற்சாகமாகக் கொண்டாடினர்.

இந்த நிகழ்ச்சியில்,
மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு. பாபு,
ஒன்றிய குழு தலைவர் பாஸ்கரன்,
ஒன்றிய கவுன்சிலர் கணபதி,
பொது குழு உறுப்பினர் R.C. மணிமாறன்,
பீஞ்சமந்தை ஊராட்சி மன்ற தலைவர் திருமதி. ரேகா ஆனந்தன்,
உள்ளாட்சி பிரதிநிதிகள், கட்சி நிர்வாகிகள் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

பீஞ்சமந்தை ஊராட்சியில் நடைபெற்ற இந்த பொங்கல் விழா, சமூக ஒற்றுமை, பாரம்பரிய பண்பாடு மற்றும் மக்கள் பங்கேற்பை வெளிப்படுத்தும் வகையில் அமைந்தது என பொதுமக்கள் தெரிவித்தனர்.

✍️ வேலூர் மாவட்ட செய்தியாளர் :
T. தென்பாண்டியன்

By TN NEWS