Sat. Jan 10th, 2026

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த அனங்காநல்லூர் மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த சக்கரவர்த்தி என்பவரின் மனைவி பானுமதி, கடந்த 12.12.2025 அன்று மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரில், கொண்டசமுத்திரம் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் (த/பெ. கிருஷ்ணசாமி நாயுடு) என்பவர், தனக்கு சொந்தமான நிலத்தை விற்பனை செய்வதாக கூறி, ரூ.1 கோடி முன்பணமாக பெற்றுக் கொண்டு, ஆறு மாத காலத்திற்குள் கிரையம் செய்து கொடுப்பதாக உறுதி அளித்துள்ளார். இதற்காக பதிவு செய்யப்படாத அக்ரிமெண்ட் எழுதிக் கொடுத்ததாகவும் கூறினார்.

ஆனால், ஒப்பந்த காலம் முடிவதற்குள், அதே நிலத்தை வேலூர் சத்துவாச்சாரியில் வசிக்கும் வெங்கடராமன் (த/பெ. கோதண்டபாணி) என்பவருக்கு விற்பனை செய்து, தங்களை ஏமாற்றியதாக புகாரில் தெரிவித்திருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில், வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனம் அவர்களின் உத்தரவின் பேரில், மாவட்ட குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் திருநாவுக்கரசு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

விசாரணையின் முடிவில், பாஸ்கர் என்பவரை போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர்:
கே.வி. ராஜேந்திரன்

By TN NEWS