Sat. Jan 10th, 2026

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் (TTD) சார்பில், வைகுண்ட துவார தரிசனம் நடைபெற்று வரும் நிலையில், TTD தலைவர் ஸ்ரீ பி.ஆர். நாயுடு புதன்கிழமை மாலை திருமலை கோயிலின் வெளிப்புற வளாகம் மற்றும் லட்டு கவுண்டர்கள் ஆகிய இடங்களில் நேரில் ஆய்வுகளை மேற்கொண்டார்.

வைகுண்ட துவார தரிசனத்தை முடித்து வெளியே வந்த பக்தர்களுடன் தலைவர் நேரடியாக உரையாடி, TTD வழங்கி வரும் அடிப்படை வசதிகள், தரிசன நடைமுறைகள் குறித்து அவர்களின் கருத்துகளை கேட்டறிந்தார்.
இதற்கு பதிலளித்த பக்தர்கள், தொந்தரவு இல்லாத தரிசன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், TTD நிர்வாகம் சிறப்பான முன்னேற்பாடுகளை செய்துள்ளதாகவும் திருப்தி தெரிவித்தனர்.

தொடர்ந்து, தலைவர் லட்டு கவுண்டர்களைப் பார்வையிட்டு, லட்டு விற்பனை நடைமுறை, ஊழியர்களின் செயல்திறன் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார். அப்போது பக்தர்களிடம் கருத்துக்களை கேட்டறிந்த அவர்,
லட்டுக்களின் சுவை, தரம் மற்றும் போதுமான அளவு கிடைப்பது குறித்து பக்தர்கள் மகிழ்ச்சி தெரிவித்ததை அறிந்து கொண்டார்.

இந்த சந்தர்ப்பத்தில், வைகுண்ட துவார தரிசன காலத்தில் தினசரி சுமார் 4.80 லட்சம் லட்டுகள் தயாரிக்கப்படுவதாக அதிகாரிகள் TTD தலைவரிடம் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, அனைத்து லட்டு கவுண்டர்களும் முழுமையாக செயல்பட வேண்டும்,
பக்தர்களுக்கு எந்தவித தாமதமும் இன்றி லட்டுகள் வழங்கப்பட வேண்டும் என தலைவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வுகளின் போது தேவஸ்தான வாரிய உறுப்பினர்கள் ஸ்ரீ சாந்தாராம், ஸ்ரீ நரேஷ் உள்ளிட்ட TTD உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

திருப்பதி – தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி வெளியிட்ட செய்தி

இணை ஆசிரியர் :
ஷேக் முகைதீன்




By TN NEWS